ராவணன்- விமர்சனம்
இரண்டேகால் மணித்தியாலங்களுக்குள் வேற்று உலகில் சஞ்சரிக்க ஆசையா? முதல்ல ராவணன் திரைப்படத்தை போய்ப்பாருங்க. இதுதான் 'ராவணன்' கதை என்பது முன்னரே எல்லோருக்கும் தெரியும் என்பதால் திரைக்கதை மீதுதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, மணிரத்தினம் கிட்டத்தட்ட அந்த எதிர்பார்ப்பை 90 வீதம் பூர்த்தி செய்துள்ளார் என்றுதான் சொல்வேன். அர்ஜுனன் இருக்க கர்ணனை ஹீரோவாக்கி வெற்றிகண்ட மணிரத்தினம் இந்தத்தடவை ராமன் இருக்க ராவணனை ஹீரோவாக்கி இதிலும் ஜெயித்துள்ளார் என்றே கூறுவேன். கதை,திரைக்கதை,வசனம் மற்றும் இயக்கம். விக்ரமின் தங்கை பிரியாமணியின் சாவிற்கு காரணமாக இருந்த போலிஸ்அதிகாரி பிரித்விராஜ்ஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துகிறார், கடத்திய இடத்தில் விக்ரமிற்கு ஐஸ்வர்யாராய் மீது தாபம் ஏற்படுகிறது. இறுதியாக பிரித்விராஜ் தன் மனைவியை மீட்கிறாரா? விக்ரம் ஐஸ்வர்யா மீது கொண்ட தாபம் என்னவாகிறது? என்பவற்றுக்கான விடையை வெள்ளித்திரையில் காணுங்கள். ஊருக்கே தெரிந்த கதை, அதை விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்திவிராஜ்,பிரபு என்னும் நான்கு முக்கிய காதாபாத்திரங்களால் இன்றைய காலத்திற்கேற்ப யாரும் இதுவரை ...