ராவணன் விமர்சனம் – வாகை சூடிய வீரன்…
இயக்குனர்களின் தளபதி மணிரத்தினம் இயக்கியிருக்கும்… இல்லை… இல்லை… வாழ்ந்திருக்கும் காவியம் – “ ராவணன் ” இதுதான் ‘ராவணன்’ கதை என்பது முன்னரே எல்லோருக்கும் தெரியும் என்பதால் திரைக்கதை மீதுதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, மணிரத்தினம் கிட்டத்தட்ட அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார். அர்ஜுனன் இருக்க கர்ணனை ஹீரோவாக்கி வெற்றிகண்ட மணிரத்தினம் இந்தத்தடவை ராமன் இருக்க ராவணனை ஹீரோவாக்கி இதிலும் ஜெயித்துள்ளார். விக்ரமின் தங்கை பிரியாமணியின் சாவிற்கு காரணமாக இருந்த போலிஸ்அதிகாரி பிரித்விராஜ்ஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துகிறார், கடத்திய இடத்தில் விக்ரமிற்கு ஐஸ்வர்யாராய் மீது தாபம் ஏற்படுகிறது. இறுதியாக பிரித்விராஜ் தன் மனைவியை மீட்கிறாரா? விக்ரம் ஐஸ்வர்யா மீது கொண்ட தாபம் என்னவாகிறது? என்பவற்றுக்கான விடையை…. ஊருக்கே தெரிந்த கதை, அதை விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்திவிராஜ், பிரபு என்னும் நான்கு முக்கிய காதாபாத்திரன்களால் இன்றைய காலத்திற்கேற்ப யாரும் இதுவரை அணுகாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்தினம். முதல்ப்பாதி நேரம்போனதே தெரியவில்லை, இரண்டாவதுபாதி முன்பாதியை ...